கடுகுக் கதைகள்
Thursday, January 26, 2006
  மதுவின் காதலி
பல பேர் நடந்து செல்லும் பாதை.

"மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்" என்று சுவரொட்டிகள்..

அதன் கீழ் முழுகாமல் இருக்கும் ஒரு பெண்...

"வா!...கனம் ஒன்று ஓடிவிடலாம்" என்று கூப்பிட்டான்...
உறவோடு கூப்பிட்டவன் என்னை அருந்தி விட்டு,
கருவோடு ஒன்றை கொடுத்துவிடுச் சென்றான், இன்னும் வரவில்லை...

-மதுவின் காதலி
 
Tuesday, January 17, 2006
  கை
இப்ப ஒரு வாரமா தான் இந்த 9 மணி பஸ். 4 வருஷமா 'டான்'னு 8 மணி பஸ் எடுத்து கரெக்டா 8.30க்கு சீட்டுலே இருக்கிற சுஜாதா, திரும்பவும் இன்னைக்கு அந்த 9 மணி பஸ்ஸிலே ஏறுனா. 8 மணி பஸ்ஸை விட, இந்த பஸ்ஸுலே கூட்டம் ஜாஸ்தி தான்... சீட் கிடைக்காது... ஓரமா ஒரு கம்பி பக்கத்துலே பல்லி மாதிரி ஒட்டிகிடு போகனும்...அது தானே அவளுக்கும் வேணும்...

திடீருனு நம்ம ட்ரைவர் அப்பு ஒரு ஸ்பீட் ப்ரேக் போட்டாரு... சுஜாதா முதுகு மேலே ஒரு வாரமா கோலம் போட்டுகிட்டு இருந்த கை, எதிர்பார்த்த மாதிரியே திரும்பவும் புள்ளி வைக்க ஆரம்பிச்சுது.

முதல்லே சுஜாதா தமிழ் பட ஹீரோயின் மாதிரி பளார்னு ஒன்னு கண்ணத்துலே விடலாம்னு தான் நினைச்சா...ஆனால்.. அப்புறம் பரவாயில்லேனு அப்படியே விட்டுட்டா...
அட் லீஸ்ட்...இப்படியாவது ஒரு த்ரில் கிடைக்குதே...
எப்போதும் குடும்பத்துக்காகவே உழைக்கிற சுஜாத்தாவும் ஒரு பொண்ணுனு எல்லாரும் மறந்துட்டாங்க..
"ஏன் டீ, 35 வயசாயிடுச்சே, காலா காலாத்துலே ஒரு கண்ணாலம் பன்னிக்கிறதில்லையா"னும் யாரும் கேக்கலே, அவளுக்கும் வாயை தெறக்க சான்ஸ் கிடைக்கலே...

பொதுவா முதுகுமேலே லைட் ரங்கோலி கோலம் போடுற கை... இன்னைக்கு இடுப்பு வரைக்கும் ஆட்டுக்கால் புள்ளி கோலம் போட ஆரம்பிச்சிடிச்சு. அப்படியே கொஞ்ச நேரம் சுஜாதா மெய்மறந்து நின்னுகிட்டு இருந்தா...அந்த கையோட சொந்தகாரன் யாருனு தெரிஞிக்க அவளுக்கும் ஆசை தான்... திரும்பி பாக்கலாமா?? பாத்தா அவன் என்ன நினைப்பானோ... சரி பரவாயில்லை பாத்திடுவோம்...

சுஜாதா, லைட்டாக திரும்பினாள்... அங்கு 2 கண்கள் அவளை குரு குருவென, குழந்தை கையிலிருட்ந்த மிட்டாயை திருடித் திண்பவனைப் பார்ப்பது போல் பார்த்தன... ஆனால் அவன் கையின் உரிமையாளன் இல்லை...

"அம்மா... நீ நிக்க வேண்டிய அவசியம் இல்லே.. பின்னாலே லேட்டீஸ் சீட் எல்லாம் காலியாதான் இருக்கு, நீ அங்கே போயி உக்காரலாம்.. இல்லை 8 மணி பஸ் எடுத்தா கூட்டமே இருக்காது" என்று கண்டக்டர் சொன்னதைக் கேட்டதும் சுஜாதா கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.. தன் கையை.
 
எல்லாரோட வாழ்க்கையிலேயும் அங்கங்கே சில கடுகுகள் வெடிக்கிறதுண்டு. சில கடுகுகள் கொஞ்சம் பெருசா வெடிச்சி, இப்படி கடுகுக் கதைகளா மாறுறதும் உண்டு.

முன்பைய படைப்புகள்
2006-01-15 / 2006-01-22 /


Powered by Blogger